தோல்விகள், ஏமாற்றங்கள், நினைத்தது கிடைக்காமல் போவது எல்லாரோட வாழ்கையிலும் வருவது தான். ஆனால் அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது தான் வாழ்க்கை நமக்கு சொல்லி தருவது.
எனக்கு 12 final examla எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைந்த மதிபென் தான் கிடைத்தது. வாழ்கையில் முதல் முறை ஏமாற்றம் தோல்வி. அந்த வயதில் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. என்னை விட பெரிய ஏமாற்றத்தில் என் பெற்றோர், அது என்னை இன்னும் கஷ்டத்தில் ஆழ்த்தியது. அப்போது எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று தான், அழுதேன், அழுதேன், அழுதுகொண்டே இருந்தேன்.
சில வருடங்களுக்கு பிறகு யோசித்தால் அது அவளவு பெரிசாக தெரியவில்லை. ஆனால் எனக்கு அப்போது ஏமாற்றங்களை ஏற்று கொள்ள தெரியவில்லை.காலங்கள் நகர்ந்தன, பெற்றோரின் கை பிடியில் இருந்து தனியாக வாழ கூடிய நிலைமைக்கு வந்தேன். 6 வருடங்கள் நகர்ந்தன, இந்த 6 வருடங்களில் நான் எதிர் பார்த்த வாழ்க்கை கிடைத்தது. பெரிய ஏமாற்றம் என்று எதுவும் கிடையாது. ஆனால் காலங்கள் மாறின, கடந்த சில மாதங்களில் எதிர் பாராத மாற்றங்கள் தோல்விகள் ஏமாற்றங்கள்.
ஆனால் 12 ஆம் படிக்கும் போது இருந்த சோகம் கவலை இப்பொது இல்லை. வாழ்கையை practicala பார்க்க முடியுது. இது நமக்கு கிடைக்க வில்லை என்றால் அதற்கு 60% ஏமாற்றம் கவலை இருந்தாலும் 40% நன்மையை பார்க்க முடியுது. இந்த 6 வருடம் கற்று குடுத்தது இதுதான் என்று இப்போது தெரிகிறது.
ஆனால் வாழ்கையில் சில மனிதர்களுக்கு எந்த தோல்வியும், ஏமாற்றமும் வந்தது இல்லையே, அவர்களுக்கு நினைப்பது எல்லாம் கிடைக்கின்றதே என்று எனக்கு வியப்பாக தோன்றி உள்ளது. ஆனால் அது அப்படி கிடையாது என்பது எனக்கு தெரிய பல ஆண்டுகள் ஆனது.
90% மக்கள் வாழ்கையை எதிர் பார்த்து தான் வாழ்கிறோம் ஆனால் அவர்கள் வாழ்கையை அதன் போக்கில் எடுத்து கொள்கிறார்கள். அதனால் எல்லாமே அவர்களுக்கு வெற்றி தான், ஏமாற்றம் என்பதே கிடையாது. இது அனைத்துமே ஒருவரோட ATTITUDE la தான் இருக்கு.
பின் குறிப்பு : நான் மேற்படி கூறிய நபர் நம்முடன் BE படித்தவர்.
இனிமே வாழ்கைல நம்மளோட ATTITUDE மாத்துறது கஷ்டம். அதுனால நண்பர்களே உங்களுக்கு கல்யாணம் ஆகி உங்களுக்கு குழந்தை பிறந்து பிறகு. அதற்கு இந்த மாதிரி ATTITUDE கற்று குடுங்க. இன்று என் நண்பனின் குழந்தைக்கு பேர் வைக்கும் நிகழ்ச்சிக்கு போகிறேன் . எனவே நன்றே ஆரம்பிக்கட்டும் அதுவும் இன்றே ஆரம்பிக்கட்டும்.
A-T-T-I-T-U-D-E Really M-A-T-T-E-R-S
Sunday, May 25, 2008
Wednesday, May 21, 2008
தனிமை
வாழ்க்கையில் எந்த தனிமையை பார்த்து பயந்து சிங்கப்பூர் வந்தேனோ..
இப்போது அதே தனிமை :(
"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ!!!"
- இது இல்லை என்னோட தனிமை.. இது பிரிவின் சுகம்..
சிறையில் தனியா இருப்பது போல் :(
ஏன் டா இப்படி தத்துவமா பேசுற என்று கேட்டால்...
காதல் என்றால் கவிதை வருது.. சோகம் என்றால் தத்துவம் தான் வருது...
நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் சில வருடங்கள் கழித்து படித்து ரசிக்கத்தான்..

Friday, May 16, 2008
சுஜாதாவின் பத்து கட்டளைகள்
நான் படித்து ரசித்த சில துளிகள் - நன்றி orkut
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Thursday, May 15, 2008
GOD???
Everyone have their own idea about GOD..
For Someone GOD is Supreme Power
For Someone GOD is Faith
For Someone GOD is Love
For Someone GOD is Divine

But for me GOD is a Life Balance. He will balance your life to go in a steady pace. Once u feel u r happy with no problems around you he balance your life with problems to tackle and once you feel very low & having lot of problems, he will balance your life giving good people around you to solve the problem.
Because its untold truth that life should made of Success and Failure
Up's and Down
Happy and Sorrow
Good and Bad
Newton is GOD, i don't know whether his third law holds for science but it really holds for Lifeeeeeeeeeeeeeeeeeeeeeee
Every time i feel it in my life!!! I think everyone feel the same thing....

Subscribe to:
Posts (Atom)