Tuesday, February 26, 2008

பள்ளி பருவம்!!

2000 ஆம் ஆண்டு பிறக்கும் குழந்தையின் கதி என்ன??

கவலை இல்லாமல் வாழும் அந்த அழகிய நாட்கள் எஙகே சென்றன??

6 வயதில் பள்ளிக்கு போகும் காலம் மாறி 4 வயதாகி இப்போது 2 வயது குழந்தையை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.. அடுத்து வரும் குழந்தை ஆஸ்பத்திரியில் இருந்து பள்ளிக்கு தான் எடுத்து செல்வார்களோ??

Tution என்பது படிக்காத மாணவர்கள் செல்லும் இடமாக இருந்தது ஆனால் நான் படிக்கும் போது 11 & 12 படிக்கும் அனைவரும் tution சென்றோம்.. இப்போது 5 வயது குழந்தை முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் அதிக பேர் tution செல்கிறார்கள்.. காலையில் பள்ளி மாலையில் tution என்ற MBA வாழ்க்கை இந்த சின்ன வயசுல தேவையா??

கால் ஆண்டு அரையாண்டு மற்றும் முழு பரிக்ஷை விடுமுறையில் தாத்தா பாட்டி ஊருக்கு மற்றும் சுற்று்லா , நண்பர்கள் உடன் வி்ளையாட்டு என்று சுற்றி திரிந்த நாட்கள் சென்று ஸ்பெஷல் வகுப்பு, extra curricular வகுப்புகள் என்று 365 நாட்களும் உழைக்க வேண்டிய நிலை தேவையா??

இன்ஜினியரிங் மற்றும் டாக்டர் தான் நல்ல படிப்பு என்ற எண்ணம் வந்ததுக்கு யார் காரணம் ??

பரிட்சையில் தோல்வியினால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்தந்துகு காரணம் யார் ??

"பள்ளி பருவம் மறுபடி கிடைக்காதா" என்று நான் அனுபவித்த அந்த நாட்களை எனக்கு அடுத்து வரும் தலை முறைக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயத்தில் எழுதுகிறேன்!!!